Breaking News

புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான போட்டியில் இளங்கோ இல்லம் சம்பியனானது

 (க.மகாதேவன்-உடப்பு)

புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இன்று (31) பாடசாலையின் அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது, புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்  திரு.ஏ.எச்.எம். அர்ஜூன அவர்களின் அழைப்பில் பேரில் பிரதம அதிதியாக ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.டி. சொலமன் கலந்து கொண்டார். 


உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜே.எம்.ஜி. வசந்த குமார, புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.நௌசாத், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.டபில்யு.ஏ.டி. பாலித தயானந்த மற்றும் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.சின்னராசா, சமூக சேவையாளர் திரு.இரா. மகாதேவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


இறுதியாக  இளங்கோ இல்லம் 597 புள்ளிகளையும், நாவலர் இல்லம் 537 புள்ளிகளையும், விபுலானந்தர் 446 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.  
















No comments

note