Breaking News

மதுரங்குளி ஸ்ரீமாபுர மக்களுக்கான இலவச குடிநீர் திட்டம் திறந்து வைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)

மதுரங்குளி பத்தாம் கட்டை  ஸ்ரீமாபுரம் ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் குடி நீர் திட்டம் இன்று (14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தை பு/ கஜூவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ. ஸன்ஹீர் ( கபூரி) யின்  வேண்டுகோளுக்கினங்க நாராமலையைச் சேர்ந்த சாஹூல் ஹமீத் முஹம்மது நபாயிஸ் தனது சொந்த நிதி மூலம் சுமார் 22 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (R/O Plant) தொகுதியை  ஸ்ரீமாபுர மக்களுக்கு  இலவசமாக வழங்கும் நோக்கோடு அமைத்து கொடுத்ததோடு இன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைத்துள்ளார்.


இந்நிகழ்வில் உலமாக்கள்,மதத் தலைவர்கள், மதுரங்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து  சிறபித்தனர்.


















No comments

note