புத்தளம் கடையாக்குளம் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக பைசல் எம்.பியுடன் கலந்துரையாடல்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கடையாக்குளம் அஷ்ரபிய்யா பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அபிருத்திகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் ஒன்று அண்மையில் (30) கடையாக்குளம் பிரதேசத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் இடம்பெற்றது.
புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் செயற்பாட்டாளருமான ஆசிரியர் எச்.என்.எம்.சிபாக்கின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம் கடையாக்குளம் சமூக ஆர்வலர் ஜம்சித் ஹாதியின் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த இந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிவாசல்கள், சங்கங்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக பாதை அபிவிருத்தி, வடிகான் அமைப்புக்கள், சுகாதார மேம்பாட்டு திட்டம், இரண்டாம் வட்டார மக்களுக்கான சிறு நூலகம் ஒன்றினை அமைத்தல், மணல்குன்று பாடசாலை அபிவிருத்தி, முன்பள்ளிகளுக்கான வசதிகள், தாய் சேய் சிகிச்சை நிலையத்தின் தேவைப்பாடு கள் உள்ளடங்களாக இப்பிரதேச மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பாக தான் கவனத்தில் எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் இதன் போது தெரிவித்தார்.
No comments