ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி பரீனா அவர்கள் காலமானார்
கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி பரீனா அவர்கள் இன்று (31) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.
அன்னார் காலஞ்சென்ற அல் ஹாஜ் சாகுல் ஹமீது, அஸ்மா உம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்ற அல்ஹாஜ் அஸ்வர் அவர்களின் அன்பு மனைவியும், அரபாத், அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், முஜாஹிதா, முபஸ்ஸரா, முபாரகா, முபஸ்லியா , ஆகியோரின் அன்பு தாயும், றபீக் (முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்), மரைக்கார், முஸம்மில், (முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்), நியாஸ், காலஞ்சென்ற நசீர் ஆகியோரின் அன்பு சகோதரியும் முஸம்மில், அருஸ், சப்லானா, மபாஸா, அஸ்னா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் (31) இன்று அஸர் தொழுகையின் பின் விருதோடை முஸ்லிம் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல் மகன் அரபாத்
No comments