Breaking News

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரியின்  2025 ஆம் வருடத்திற்கான பட்டமளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்கிழமை 2025/01/14 ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


கல்லூரியின் 13 அணிகளைச்சேர்ந்த சுமார் 350 மாணவியர்கள் பட்டங்களை பெற இருக்கும் இப்பட்டமளிப்பு விழாவில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருப்பதோடு, கௌரவ அதிதிகளாக மலேசியா இஸ்லாம் மேலக பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டாடுக் ஹாஜ் மொஹமட் டைப் மற்றும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி வேந்தர் கலாநிதி அனஸ் பின் தாஜுடின் கலந்து சிறப்பிக்க உள்ளனர். 


விஷேட அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை பீடாதிபதி பேராசிரியர் பரீனா ருஸைக் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ராஹிலா சியாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 


பட்டமளிப்பு விழாவுக்கான பிரதான உரையினை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் முதல்வர் உஸ்தாத் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்த இருப்பது சிறப்பம்சமாகும்.


இலங்கையின் முன்னோடி இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி, 1989 களில் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை தேசிய ரீதியில் பல்வேறு தளங்களில் பங்களிப்புசெய்யும் சுமார் 700 பெண் ஆளுமைகளை உருவாக்கியிருக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note