கற்பிட்டி தில்லையூர் பாடசாலையில் இடம்பெற்ற கால்கோள் விழா
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், எம்.யூ எம் சனூன்)
கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் காள்கோல் நிகழ்வு வியாழக்கிழமை (30) பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர்களான எக்ஸ் ரெஜீனா பேகம் மற்றும் எஸ்.டி.எம் சுஹைப் (நவ்ஸாத்) , பாடசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர் எம் மாஹீர், உறுப்பினர் மௌலவி றிப்கான் ( றஹ்மானி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments