புத்தளத்தில் இடம்பெற உள்ள தொழில் பயிற்சி சந்தை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் மற்றும் தொழில் பயிற்சி சந்தை செவ்வாய்க்கிழமை (07) காலை 09 மணி தொடக்கம் பிற்பகல் 03 மண வரை இடம்பெற உள்ளது.
புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கமைப்பில் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற உள்ள மேற்படி தொழில் சந்தையில் தொழில் வழிகாட்டல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்கள், வியாபார அபிவிருத்தி சேவைகள், உயர் கல்வி சந்தர்ப்பங்கள், மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் முன் அனுபவத்தின்படி கல்விச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளல் தொடர்பான வழிகாட்டல்கள் என்பன இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments