Breaking News

புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக ரனீஸ் பதூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ரனீஸ் பதூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் அவர்களின் நேரடி பிரதிநிதியாக புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக ரனீஸ் பதூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதன் மூலம், புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அபிவிருத்திகள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் என அனைத்தும் இங்கேயே கலந்துரையாடப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு குறித்த அபிவிருத்திகள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


எனவே இதன் மூலம் புத்தளத்திற்கான அபிவிருத்திகள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் செயலாளரினாலும்  இந்த சந்தர்ப்பம் ரனீஸ் பதூர்தீன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.




No comments