புத்தளத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானம் நிகழ்வு 2025/01/04 ம் திகதி சனிக்கிழமை புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் காலை 08.30 மணி தொடக்கம் 2.30 வரை இடம்பெற உள்ளது.
உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் என்ற அடிப்படையில் அனைவரும் வருகை தந்து தங்களின் உதிரத்தை கொடுத்து மற்றவர்களின் உயிர்களை காப்போம். என்பதுடன் உதிரம் கொடுப்பவர்களை கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப செயலாளர் அஷ்ஷேக் இமாம் தீன் அஷ்ரபி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments