புத்தளம் காஸிமிய்யா முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் வபாத்தானார்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட முன்னாள் ஜம்இயத்துல் உலமா சபை தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் திங்கட்கிழமை (13) மாலை வபாத்தானார்.
அன்னார் புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி வீசிய நாடறிந்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.
காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத் அவர்கள் அண்மையில் அவரது சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments