சிலாபத்தில் 500Kg எடை கொண்ட பாரிய மீன் பிடிப்பு!.
(க.மகாதேவன்-உடப்பு)
சிலாபம் இயந்திரப்படகு கடற்றொழில் மீனவர்களினால் பாரிய மீன் ஒன்று பிடிக்கப்பட்டு கரைக்கு (31) திகதி கொண்டு வரப்பட்டது.
ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட இந்த மீன் சுமார் 500கிலோ எடையைக் கொண்டதாகக் காணப்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு பிடிக்கப்பட்ட இந்த மீனானது மற்றைய படகின் உதவியுடன் சிலாபம் இறங்கு துறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை இந்த மீன் ஒரு கிலோ 1500ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டது. சிலாபம் மீனவர்களின் வரலாற்றில் இது மிகவும் பிரபல்யமானதாகும்.
No comments