Breaking News

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் 2025

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் (10) அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைமையில் சாஹிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.   


அதிபர்  ஐ.ஏ.நஜீம் அங்கு வரவேற்புரையை  நிகழ்த்தினார்.


கல்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர்  ஏ.எம்.ஜவாத், புத்தளம் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ. சன்ஹீர், சாஹிரா கல்லூரியின் முன்னாள் உதவி அதிபர்  எம்.எம்.எம்.நதீர் ஆகியோரும் இதன்போது சமூகம் அளித்திருந்தனர்.


நிர்வாகக்குழு கலைப்புடன்  புதிய நிர்வாக குழுவும் அன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


பதவி வழியாக  அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைவராக நியமிக்கப்பட்டார். 


கலாநிதி எஸ்.ஆர்.எம். சராபாத்துல்லாஹ் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


ஏ.ஜே.எம். இல்ஹாம் உப தலைவராகவும், உப செயலாளராக எம்.எப்.ஆசிப் ரிழாவும், எஸ்.எஸ்.தில்ஹசன்  பொருளாளராகவும், எம்.ஆர்.எம்.ஷாமில் உப பொருளாளராகவும்  தெரிவுசெய்யப்பட்டனர். 


இஸட்.ஏ.சன்ஹீர் போஷகராகவும், ஏ.ஜே.எம். இனூஸ்,  எம்.எஸ்.ரில்வான், எம்.டி. ரினாஸ் அஹமத், எம்.ஐ. அஸ்லம், எம்.என்.ஏ. பாதீர், எஸ்.என்.எம்.ரியாஸ், எஸ்.எம். பஹ்மி, ஏ.சீ.எம். இம்தியாஸ், எம்.எம். இஹ்திஸாம், ஏ.எம். அஸ்ரின், ஏ.எல்.எம். சித்தீக் கான் ஆகியோர்கள் செயற் குழு உறுப்பினர்களாக. தெரிவு செய்யப்பட்டனர்.


இதனையடுத்து உரையாற்றிய செயலாளர் கலாநிதி எஸ். ஆர். எம். எம். சராபதுல்லாஹ் தனது கன்னி உரையில்,


வெளிநாடுகளில் வசிக்கும் சாஹிரா பாடசாலை பழைய மாணவர்களுக்கும் அங்கத்துவத்தை வழங்கி அதனூடாக பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திகளை பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.




No comments

note