காத்தான்குடி பிரதான வீதி தெரு விளக்குகளை உடனடியாக ஒளிரச்செய்யுங்கள்- MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.!!
காத்தான்குடி பிரதான வீதி தெரு விளக்குகள் ஒளிராமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல் வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை ஒளிரச்செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நகரசபை செயலாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
இன்று திங்கட்கிழமை (23) காத்தான்குடி நகரசபையில் இடம் பெற்ற கூட்டத்திலே இவ்வாறு கோரிக்கைவிடுத்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் நகரசபை தவிசாளர் எச்.எச்.எம். அஸ்பர் இது தொடர்பில் விளக்கம் வழங்கியதுடன் இதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்ததுடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் மற்றும் நகரசபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
No comments