Breaking News

புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் "சிப் அபகஸ்" புத்தளம் கிளையின் பெருமை சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையில் "சிப் அபகஸ்  கல்வி திட்டம்  2024" இந்த வருடம் வெற்றிகரமாக அறிமுகப்பட்டுள்ளதோடு மாத்திரமின்றி அதன் மாணவர்கள் சாதித்தும் காட்டி இருக்கின்றார்கள்.


இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது அபகஸ் பயிற்சிகளை‌ பெற்று வருகின்றனர்.


இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், தேசிய அளவிலான சிப் அபகஸ் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பல முன்னணி இடங்களைப் பெற்று பெருமையை சேர்த்துள்ளனர்.


அண்மையில் (14) கொழும்பு சுகததாச ‌வளாகத்தில் நடைபெற்ற தேசிய ‌அளவிலான‌ போட்டியில் 10 மாவட்டங்களிலுள்ள 24 க்கும் மேற்பட்ட சிப் அபகஸ் கிளையை‌ சேர்ந்த 900 மாணவர்கள் பங்குபற்றினர். 


இதில் புத்தள‌ம் சிப் அபகஸ் கிளை சார்பாக பங்குபற்றிய மாணவர்கள்  1ம், 2 ம் , 3 ம் இடங்களை பெற்றதோடு 25 க்கும் மேற்பட்ட வெற்றிக் கிண்ணங்களையும், பதக்கங்களையும் சுவீகரித்து புத்தள‌ம் மண்ணிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர்.


சிப் அபகஸ் புத்தளம் கிளையின் இந்த சாதனை, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.


இதேவேளை சிப் அபகஸ் கல்வி நிலையத்துக்கு 2025 ம் ஆண்டுக்கான புதிய‌ மாணவர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.


06 வயது முதல் 13 வயது வரையிலான மாணவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.















No comments

note