Breaking News

கற்பிட்டி கே.எஸ்.பீ யின் பிரியாவிடை, பரிசளிப்பு நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி விஞ்ஞான பிரிவு வேலைத்திட்டத்தின் (KSP) ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (30)  கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  கே.எஸ்.பீ அமைப்பின் தலைவரும் கற்பிட்டி கோட்ட கல்விக் காரியாலய ஆசிரிய ஆலோசகருமான எம் ஜீ.எம் ஹிஸான் தலைமையில் இடம்பெற உள்ளது 


இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி  அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் கே எஸ்.பீ இன் பாட விரிவுரையாளர்  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.




No comments

note