Breaking News

கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி தேசிய கல்வியியலாளர் விருது பெற்றார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழிநுட்ப சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி, தகவல் தொழிநுட்பக் கற்கைகளில் சிறப்பான பங்களிப்புக்காக தேசிய கல்வியியலாளர் விருதைப் பெற்றார்.


தகவல் தொழிநுட்பத்திலும், Innovation, Digital Education, E-Commerce போன்ற துறைகளிலும் இளைஞர்களை ஊக்குவிக்கவும், கல்வி மற்றும் பல்கலைக்கழக நுழைவு ஆலோசனைகளிலும் அவர் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியுள்ளார்.


அவரது கற்பித்தல், ஆய்வு மற்றும் சமூகப் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.


கலாநிதி  எப்.எச் அஹமட் ஷிப்லி கிரேட்  மைன்ட் கெம்பஸ் (Great Minds Campus) நிறுவனத்தின் தலைமை கல்வி ஆலோசகர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.




No comments

note