ஜனாதிபதியின் மறதி
அரசியல்வாதிகள் எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேடைகளில் மக்களை சூடாக்குகின்ற வசனங்கள அவிழ்த்துவிடுவார்கள். அவைகள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்று சிந்திக்கும் ஆற்றல் மக்களிடம் இல்லை.
இங்கே பதிவிட்டிருப்பது தேர்தலுக்கு முன்பும், பின்பும் பேசப்பட்ட விடயம் ஆனால் இது வெளியே பேசப்படாத NPP யின் நிலைப்பாடு.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் ஆட்சியை கைப்பற்றியதும் இந்தியாவின் அதானி குழுமத்தின் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக 15.09.2024 அன்று மக்கள் முன்பாக ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.
அதேநேரம் ஆட்சிக்கு வந்ததன் பின்பு 17.12. 2024 அன்று இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து வேலை செய்வதை தான் பெரிதும் விரும்புவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
இது மறதியா அல்லது சந்தர்ப்பவாதமா என்று தெரியவில்லை.
முகம்மத் இக்பால்
No comments