Breaking News

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்

பாறுக் ஷிஹான்

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் வியாழக்கிழமை(26) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைப்பின் செயலாளர் முஹம்மட் முனா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில்  அதிதிகளாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர் சுபோதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இரத்ததான முகாமில் சுமார் 80 க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்தனர்.

இந்நிகழ்விலே அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்களும் கலந்து  கொண்டனர்.


எமது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக இவ்வாறான இரத்தக்கொடை நிகழ்வுகள் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, ஒரு உயிரை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்ற நன்மையைப்பெறக்கூடிய ஒரு செயற்பாடாகும்.எனவே, இவ்விடயம் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையிலே நாம் முயற்சித்து இக்குருதிக்கொடையை ஏற்படு செய்திருக்கிறோம். எமது அமைப்பினூடாக இச்சமூக சேவையை தொடர்ந்தும் செய்து வருகிறோம் என ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் செயலாளர் முஹம்மட் முனா     கூறினார்.













No comments

note