முஹம்மது சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பரமாணம்
முகம்மது சாலி நளீம் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.
கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக க முகம்மது சாலி நளீம் அவர்களின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.
அதற்கமைய அவர் இன்று பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு முன்னர் அவர் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments