Breaking News

கனமூலை ரஹ்மத் கிராம நூராணிய்யா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

மதுரங்குளி கனமூலை ரஹ்மத் கிராமத்தில் அமைந்துள்ள நூராணிய்யா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


மல்லிகை, தாமரை, ரோஜா ஆகிய மூன்று இல்லங்களை சேர்ந்த பாடசாலையில் கல்வி பயிலும் 23 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.


இந்த விளையாட்டுப் போட்டிகளை பாலர் பாடசாலையில் கடமை புரியும் ஆசிரியைகளான எம்.எச்.ரிழ்வானா பேகம், எஸ்.எப்.ரிசாயா ஆகியோருடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோரும், நிர்வாகக் குழுவினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


50 மீட்டர் ஓட்ட போட்டி, சாக்கோட்டம், பழம் பொறுக்குதல், சீருடை அணிதல், தாரா நடை, தடை தாண்டி ஓட்டம், பலூன் உடைத்தல், குளிர்பானம் அருந்துதல், தொப்பி மாற்றுதல், அஞ்சல் ஓட்டம், நீர் நிறைத்தல் போன்ற போட்டி நிகழ்ச்சிகள் நடந்தேறின.


கண்ணுக்கு குளிர்ச்சியாக  உடற்பயிற்சியும் பாடசாலை மாணவர், மாணவியர்களால் அரங்கேற்றப்பட்டது. 


இந்நிகழ்வில் பிரதேசத்தின் கிராம சேவையாளர் திரு. ருவான் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.   


போட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் முஹம்மது சிபாத்,  கனமூலை முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்  முஹம்மது அஸ்வர் ஆகியோர் கடமையாற்றினர். 


போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.










No comments

note