Breaking News

முன்னாள் நிதி அமைச்சர் நெய்னா மரைக்காரின் பெயர் கற்பிட்டி தில்லையூர் பாடசாலைக்கு சூட்டப்பட வேண்டும் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஆப்தின்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி தில்லையூர் அரசினர்  முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் விளையாட்டு முற்றம் கால்கோள் விழா வியாழக்கிழமை (05) பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 

ஓய்வு பெற்ற முன்னாள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தனது  சொந்த விடுமுறையை பெற்றுக் கொள்ளாத ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய எஸ்.எம்.எஸ்  ஆப்தீனின் தனது பொற் கரத்தினால்  மேற்படி சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைக்கப்பட்டது.


அதில் உரையாற்றிய ஆப்தின் ; 

கற்பிட்டி தில்லையூர் பாடசாலை 1982 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .  இப்பாடசாலையின் உருவாக்கத்திற்கு முயற்சி செய்தவர்கள் தில்லையூரைச் சேர்ந்த  ராவூத்தர் மரைக்கார், கப்ப மரைக்கார், சம்சூதீன் மற்றும் கல்லடி பிச்சை ஆகிய நான்கு பேரும் காலஞ்சென்ற முன்னாள் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் நிதி திட்டமிடல் அமைச்சருமான எம் எச் எம் நெய்னா மரைக்காரை நேரில் சென்று சந்தித்து விடுத்த கோரிக்கையின் பெயரில் அமைச்சரின் முழு முயற்சியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த கற்பிட்டி தில்லையூர் பாடசாலை


 இன்று 42 வருடங்களை தாண்டி வளர்ச்சி அடைந்துள்ளதை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் மேலும் இப்பாடசாலையின் பெயர் இப்பாடசாலை உருவாக்கத்திற்கு காரண கர்த்தவாக இருந்த மர்ஹூம் முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி திட்டமிடல் அமைச்சருமான எம் எச் எம் நெய்னா மரைக்காரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் முன் வைப்பதாக  குறிப்பிட்டதுடன் மேலும் இப்பாடசாலையின் உருவாக்ஙத்தில்  பங்காளார்களாக செயற்பட்ட மர்ஹூம் லியாவுல் பர்னாட் கலைச்சூடர் எஸ்.ஐ.எம் ஏ ஜப்பாரையும் நினைவு கூர்ந்து அவரின் சேவைகளையும் பாராட்டி உரையாற்றியமை 


மேற்படி நிகழ்வின் கௌரவ அதிதிகளாக தில்லையூர் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினரும் தில்லையூர் பள்ளிவாசல் பேஷ் இமாம் எம். றிப்கான் , பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.மாஹீர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் பள்ளிவாசல் தலைவருமான அன்வர்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









No comments

note