Breaking News

யோகாசனம் பற்றி ஜம்இய்யதுல் உலமாவின் கருத்து கவலையளிக்கிறது.

“யோகாசனம் இஸ்லாமிய அகீதாவுக்கெதிரானது. இதில் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டாம்” என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளதாக சமூகவலைத் தளங்களில் காணக்கிடைத்தது. 


முஸ்லிம்கள் பங்குகொள்வதற்கு தடைவிதிக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது தங்களுக்கு பரிச்சயம் இல்லாத யோகாசனம் பற்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்திருப்பது கவலையான விடயமாகும். 


யோகாசனம் என்பது உடல், உள ஆரோக்கியத்தை பெறுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பயிற்சி முறையாகும். இது பயிற்சியின்போது உடல் அசைவினாலும், மூச்சு பயிற்சியினாலும் உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை ஏற்படுகின்றதே தவிர, வேறு எந்தவித தீமையும் இதில் இல்லை.


இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பயிற்சியின்போது அவர்களது சமய மந்திரத்தை உச்சரிக்கின்றார்கள். ஆனால் யோகாசானத்தில் அவ்வாறு மந்திரம் உச்சரிக்க வேண்டுமென்ற எந்தவித கட்டாயமுமில்லை அத்துடன் இது மதத்துடன் சம்பந்தப்பட்ட விடயமுமில்லை. 


யோகாசனம் பற்றி நீண்ட கட்டுரை தொடரினை 2004 – 2005 வரையில் “தினகரன்” பத்திரிகையில் எழுதியிருந்தேன். பின்பு அதனை புத்தகமாக வெளியிட்டிருந்தேன். 


எனவே தங்களுக்கு அறியாததும், பரிட்சயம் இல்லாததுமான விடயங்கள் பற்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கருத்துக்கூறுவது ஆரோக்கியமானதல்ல. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note