சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் கெளரவிக்கப்பட்ட ஆதம்பாவா எம்.பி.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை (28) இரவு ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது காரியாலயத்தில் அதன் தலைவர் மெளலவி எம்.எஸ்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஊர் நலன் சார்ந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தொடர்பில் மார்க்க ரீதியான தெளிவுகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையின் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments