Breaking News

வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தளம் - பூனைப்பிட்டி சாந்த லுசியா தேவாலயத்தின் வருடாந்த திருநாள் நிகழ்வு!.

 (க.மகாதேவன்-உடப்பு)

வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தளம் பூனைப்பிட்டி சாந்த லுசியா தேவாலயத்தின் வருடாந்த திருநாள் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


பூனப்பிட்டி பங்குத் தந்தை ஜோசப் ஜேலோவ் அடிகளாரின் தலைமையில் திருநாள் திருப்பலிப் பூசை இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் அருட்தந்தைகளான  ரெஜினோல்ட், சிஸ்வான், அனுஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் தமிழ் சிங்களம்  ஆகிய இரு மொழிகளிலும் திருப்பலியானது மிகச்சிறப்பாக பக்தியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.


கட்டைக்காடு பங்கைச் சேர்ந்த கட்டைக்காடு, பனிச்சவில்லு, வட்டவான், உடப்பு ஆகிய ஆலயங்களைச் சேர்ந்த பெருந்திரலான மக்கள் பங்குபற்றினர். 


சிறப்பான பாடல்களுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டு நன்றி உரையுடன் புனித லுசியா முனிஸ்வரியின் திருச்சொரூபம் பேண்ட் வாத்தியம் முளங்க பவனியாக இழுத்துச் செல்லப்பட்டு இறுதியாக அன்னை லுசியா முனிஸ்வரியின் திருச்சொரூப ஆசியுடன் கரகோசங்களுக்கு மத்தியில் திருப்பலிப்பூசை இறை ஆசியுடன் இனிது நிறைவு பெற்றது.













No comments

note