சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா புனரமைப்பு; ஆணையாளர் கண்காணிப்பு விஜயம்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற சாய்ந்தமருது கடற்கரைப் பூங்காவுக்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளை மீளாய்வு செய்த அவர், அவற்றின் தரம் குறித்து கூடிய அவதானம் செலுத்தியதுடன் சம்மந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன முகாமையாளருடன் ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டார்.
சிறுவர்களின் விளையாட்டரங்காகவும் பெண்கள் உள்ளிட்ட பொது மக்களின் பொழுது போக்குமிடமாகவும் காணப்படுகின்ற இந்த பூங்காவின் அனைத்து கட்டுமானங்களும் சூழலும் மிகவும் பாதுகாப்பானவையாகவும் தரமானவையாகவும் அமையப் பெற வேண்டும் என்று ஆணையாளர் நௌபீஸ் இதன்போது அறிவுறுத்தினார்.
புனரமைப்பு வேலைத் திட்டத்தை இன்னும் துரிதமாக முன்னெடுத்து கூடிய விரைவில் முடிவுறுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம். நுஸைர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
No comments