நிலைமாறு கால நீதி என்னும் தொனிப் பொருளில் செயலமர்வு!.
எம்.ஏ.ஏ.காசிம் முந்தல்
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மக்கள் ஒன்றிணைவு (PUJA) 23 ஆவது "நிலைமாறு கால நீதி என்னும் தொனிப் பொருளில் செயலமர்வு" ஒன்று இன்று காலை 10.00 மணியளவில் புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள வூடப்பட் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இதன் போது சாந்த பத்திரன- தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் என்.விஜயகாந் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியதுடன் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா "சூம்" தொழிற்நுட்பத்துடன் இணைந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த செயலமர்வில் மதத் தலைவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments