புத்தளம் அல்ஃபா மஹால் கட்டிட வேலைகளை துரிதப்படுத்த கோரிக்கை
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
புத்தளம் அல்ஃபா மஹால் கட்டிட வேலைகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலைகள் நிறுத்தப்பட்டு. பின்னர், 2017 ஆம் ஆண்டு முன்னாள் நகர பிதா கே.ஏ .பாயிஸ் தலைமையில் வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, முடிவுரும் தருவாயில் அவர் காலமானார்.
தொடர்ந்து நகர பிதாவாக பதவி வகித்த ரபீகினாலும் மேற்படி அல்ஃபா மஹால் கட்டிட வேலைகள் பூரணமாக நிறைவு பெறுவதற்கு முன்பே புத்தளம், நகர சபை கலைக்கப்பட்டதால் அந்தப் பொறுப்புகள் நகர சபையின் செயலாளர் பிரதீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும் இன்று வரை மேற்படி அல்ஃபா மஹால் கட்டிட வேலைகள் நிறைவு பெறாத நிலையில் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்படுவதாக முற்பணம் செலுத்திய சுமா 300க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளதுடன் மேற்படி அல்ஃபா மஹால் கட்டிடத்தின் வேலைகளை துரிதப்படுத்தி பூர்த்தி செய்து தருமாறு புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பைசலிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments