Breaking News

சிரியாவில் போராளிகள் ஏன் இஸ்ரேலுடன் போரிடவில்லை ? பின்புலத்தில் இஸ்ரேல் உள்ளதா ?

சிரியாவை போராளிகள் கைப்பற்றியதன் பின்பு இஸ்ரேலிய படைகள் சிரியாவுக்குள் ஊடுருவி சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். ஆனால் இஸ்ரேலிய படையினர்களுக்கு எதிராக போராளிகள் ஏன் இதுவரையில் தாக்குதல்களை நடாத்தவில்லை ? சிரியாவை இஸ்ரேலுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனரா ? என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றது. 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய போராளி இயக்கங்களின் கொள்கைகள், கோட்பாடுகளை ஆராய்ந்தால் அவர்கள் ஒருபோதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று உறுதியாக கூறலாம். 


அத்துடன் ஒவ்வொரு இயக்கமும் பாலஸ்தீனில் குத்சை மீட்கும் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதனாலேயே பாலஸ்தீனில் உள்ள போராளி இயக்கங்கள் நடுநிலை வகிக்கின்றன.  


சிரியாவில் இஸ்ரேலிய படைகள் ஊடுருவியதற்கு எதிராக போரிடாமல் இன்றைய சிரியா ஆட்சியாளர்களினால் இஸ்ரேலின் ஊடுருவலுக்கு எதிராக ஐ.நா சபையில் முறையிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றது. 


எந்தவொரு போராளிகள் இயக்கமும் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றுவதற்காக தங்களது சக்திகளை ஒன்றுதிரட்டி போரிடும்போது இழப்புக்கள் ஏற்படும் அல்லது கைப்பற்றிய நிலப்பரப்பில் அகலக்கால் பதித்துவிடுவார்கள். 


அவ்வாறு அகலக்கால் பதித்த நிலையில் கைப்பற்றப்பட்ட நிலங்களை பாதுகாப்பதற்காக நிலைகள் எடுத்து தங்களது சக்திகளை பயன்படுத்துவார்களே தவிர, உலகின் பலமுள்ள நாட்டுடன் புதிய போர் ஒன்றுக்கு செல்லமாட்டார்கள். அவ்வாறு செல்வது தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிடும். 


2001 இல் வன்னியில் புலிகளுக்கு எதிராக “ஜெயசிக்குறு” இராணுவ நடவடிக்கையை முறியடித்து ஆணையிறகு இராணுவ தளத்தை விடுதலை புலிகள் கைப்பற்றி மாபெரும் வெற்றியை அடைந்தனர். ஆனால் அந்த வெற்றியை தக்கவைப்பதற்கு புலிகளுக்கு சமாதானம் தேவைப்பட்டது. தோல்வியடைந்த இராணுவத்தின் தொடர் தாக்குதலை சமாளிப்பது வெற்றிபெற்ற புலிகளுக்கு பாரிய சுமையாக இருந்தது.    


தற்போது சிரியாவை கைப்பற்றிய HDS இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக போர்புரிந்தால், HDS இயக்கத்தை முழுமையாக அழித்துவிடுவார்கள் என்பதனை ஊகித்ததன் பயனாகவே இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் முறையிட்டு ராஜதந்திர முறையை கையாள்கின்றனர் என்பது புரிகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note