Breaking News

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் வழிகாட்டலில் புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியில் இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வுகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் வழிகாட்டலில் புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும் ஐ.எப்.எம்.முன்பள்ளியில் இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வுகள் வியாழக்கிழமை காலை (19) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


முன்பள்ளி மாணவர்களிடையே இஸ்லாமிய விழுமியங்களை மேம்படுத்தி அவர்களிடையே அன்றாட பழக்க வழக்கத்தை மேலோங்க செய்து மனன சக்திகளை அதிகரித்து வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையினால் இந்நிகழ்வு தொடராக நடாத்தப்பட்டு வருகின்றது.


இந்நிகழ்வானது ஜம்இயத்துல் உலமாவினால் மேற்கொள்ளப்படும் 04 வது முன்பள்ளி பாடசாலையின் நிகழ்வாகும்.


ஐ.எப்.எம்.முன்பள்ளியின் பொறுப்பாசிரியை எம்.எஸ்.பௌசுல் ரூசி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்பள்ளியின் 25 மாணவச் செல்வங்கள், தாம் மனனம் செய்த பொருளுடன் கூடிய சிறு சூராக்கள், சந்தர்ப்ப துஆக்கள் உள்ளிட்ட அனைத்து கலை கலாச்சார நிகழ்வுகளையும் மேடையிலே அரங்கேற்றினார்கள்.


இந்த நிகழ்விலே அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி), கல்வி குழுவின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.டீ.எம்.சல்மான் (இஹ்சானி) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.














No comments

note