குறிஞ்சிப்பிட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் திருத்தியமைக்கப்பட்ட வீதி லாம்புகள்
(கற்பிட்டி எம் எச் எம் சிராஜ். புத்தளம் எம் யூ.எம் சனூன்)
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியில் கூடுதலான வீதி லாம்புகள் நீண்ட நாட்களாக பழுதடைந்து திருத்தப்படாமல் காணப்பட்டது
இது விடயமாக கற்பிட்டி பிரதேச சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அவைகளுக்கான வாகன வசதிகளும் மின் குமிழ்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறிஞ்சிப்பிட்டி சமூக ஆர்வலரும் வளர்ந்து வரும் அரசியல் வாதியுமான ஏ.ஆர் ஜெஸ்பர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக குறிஞ்சிப்பிட்டி பகுதியில் பழுதடைந்த வீதி லாம்புகளை மாற்றியமைப்பதற்காக கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மூலம் 15 புதிய மின் குமிழ்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் தனது சொந்த வாகனத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையின் பொறியியலாளரின் உதவியுடன் குறிஞ்சிப்பிட்டி பகுதியின் பழுதடைந்த மின் குமிழ்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர். ஜெஸ்பர் தெரிவித்தார்.
No comments