இலவசமான பாரம்பரிய வைத்திய சிகிச்சை முகாம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
அகில இலங்கை பாரம்பரிய சுதேச வைத்திய சங்கத்தின், புத்தளம் பாரம்பரிய சுதேச வைத்திய பாதுகாப்பு சபை மற்றும் புத்தளம் பாரம்பரிய சுதேச வைத்திய நிலையத்துக்கும் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இலவசமான வைத்திய சிகிச்சை முகாம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (15) முழு நாளும் புத்தளம் கொழும்பு வீதி பௌத்த மத்திய நிலையத்துக்கு முன்பாக அமைந்திருக்கின்ற "ஹெல வெத மஹ கெதர" வைத்திய சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.
புத்தளம் பாரம்பரிய சுதேச மருத்துவ நிபுணர்கள் பலர் இதில் கலந்து கொண்டு இந்த இலவசமான வைத்திய சிகிச்சைகளை வழங்கினார்கள்.
அதிகமான நோயாளிகள் இதில் கலந்து கொண்டு இலவசமாக வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.
No comments