மதுரங்குளி - கடையாமோட்டையில் ஒருவர் உயிரிழப்பு!.
(உடப்பு க.மகாதேவன்)
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை (30) திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரங்குளி கடையாமோட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மூத்த சகோதரியின் மகன் உள்ளிட்ட சிலருடன் ஏற்பட்டுத்திக் கொண்ட தகராறில், சகோதரியின் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments