Breaking News

ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த வடிகான் புனரமைப்பு பணிகளை உடனடியாக மீள ஆரம்பியுங்கள் - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை ..!!

கடந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தமும் செய்யப்பட்ட  ஏறாவூர் நகர பிரதேசத்திற்கான வடிகான் அமைப்பு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.


இன்று (30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு  ஆராய்ந்ததுடன் குறித்த திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.







No comments

note