புத்தளம் - உடப்பு ஆலயத்தில் கொடியேற்றம்
(உடப்பு-க.மகாதேவன்)
வரலாற்று சிறப்பு வாய்ந்த உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழாவில் உட்கொடியேற்றம் எதிர்வரும் வியாழக்கிழமை (02) காலை 10.30மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேர்த்திருவிழா (10) ந்திகதியும், தீர்த்த உற்சவம் (11) திகதியும் நடைபெறவுள்ளது.12ந்திகதி மாலை 5 மணியளவில் ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் உப்பிலிருந்து ஆண்டிமுனை ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வரை திருவீதி வலம் வருதல், அத்துடன் அன்று இரவு திருக்கல்யாண உற்சவம், வசந்த மண்டப பூஜை, திருபொன்னூஞ்சல் உற்சவம் என்பன இடம்பெறும். 13ந்திகதி மாலை 6மணிக்கு ஆஞ்சநேயர் பூஜை நடைபெற்று விழா இனிதே நிறைவடையும்.
No comments