Breaking News

பாடசாலையில் இடம்பெற்ற 2025 தரம் ஒன்று பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் 2025 ம் ஆண்டு தரம் 01 ல் இணைய உள்ள புதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (11) பாடசாலையின் அதிபர் எம் எம் எம் நவ்ப் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது உரையாற்றிய அதிபர்  எம்.எம்.எம். நவ்ப் தரம் ஒன்று மாணவர்களை இணங்கானல் செயற்பாடுகள், கற்றல் நடவடிக்கைகள், வகுப்பறை அமைப்புக்கள் , சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவித்ததுடன் புதிய தரம் ஒன்று பெற்றோர்களைக் கொண்ட ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்- எஸ்.எம் றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)










No comments

note