புத்தளம் - கரைத்தீவில் "பொன்பரப்பி விருதுகள் 2024"
புத்தளம்-கரைத்தீவில் முதற் தடவையாக துறைசார் நிபுணர்கள், மத்ரசாக்களிலிருந்து கரைத்தீவில் முதலில் பட்டம் பெற்று வெளியாகிய ஆலிம் ஆலிமாக்கள், பட்டதாரிகள், தேசிய கல்வியியல் கல்லூரியிலாளர்கள் மற்றும் இளங்கலைப் பட்டதாரிகளைக் கெளரவிக்கும் விசேட நிகழ்வு கரைத்தீவு இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால் கரைத்தீவு பெரியபள்ளியின் தலைமையின் கீழ் பு/கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 21 December 2024 ஆம் திகதி வெகு விமர்சயாக இடம்பெற்றுள்ளது.
இங்கு பிரதம அதிதியாக பு/கரைத்தீவு முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும், புத்தளம் கல்வி வலய பாட இணைப்பாளராகவும் செயற்பட்டு அண்மையில் அரச பணிநிறைவு பெற்ற திரு. Ve. அருணாகரன் அவர்களும், கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (புத்தளம் நகரக் கிளை) தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
UNDERGRADUATES ASSOCIATION - KARAITHIVU
PONPARAPPIAWARDS - 2024
KARAITHIVU
கரைத்தீவு இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பு
No comments