புத்தளம் லெஜன்ட்ஸ் கழகம் நடாத்திய காற்பந்தாட்ட தொடரில் திக்ரா 07 ஸ் அணி சம்பியனாகியது.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
24 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் "திக்ரா 07 ஸ்" , நியூ ஸ்டார்ஸ், அல் நாஸர் மற்றும் ரினேகட்ஸ் எப்.சீ. ஆகிய 04 அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகின.
பின்னர் அல் நாஸர் மற்றும் திக்ரா 07 ஸ் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.
இறுதிப் போட்டியில் திக்ரா 07 ஸ் அணி வெற்றி வாகை சூடி சம்பியனாகியதோடு அல் நாஸர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
தொடரின் சிறந்த வீரராக அல் நாஸர் அணியின் எம். முரா தெரிவானார். தொடரின் சிறந்த கோல் காப்பாளராக திக்ரா 07 ஸ் அணியின் வீரர் முஹம்மது முபாரக் தெரிவானார்.
No comments