கல்முனையில் 03 வீதிகள் மக்கள் பாவனைக்கு விடப்பட்டன.!
(அஸ்லம் எஸ். மெளலானா)
கல்முனை மாநகர சபையினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை மத்ரஸா வீதி, தைக்கா வீதி மற்றும் நகர மண்டப வீதி என்பன இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளன
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
கடந்த காலங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இவ்வீதிகள் கல்முனை மாநகர சபையின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட துரித நடவடிக்கையினால் LDSP மற்றும் PSDG திட்டங்களின் கீழ புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments