Breaking News

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் புதிதாக அஸ்வெசும விண்ணப்பிக்க வந்த மக்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்

அஸ்வெசும விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்காக மேலதிக கால அவகாசம். வழங்கப்பட்டுள்ள நிலையில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (25) பெருந்திரலான மக்கள் சமூகமளித்திருந்தனர்.


புதிதாக அஸ்வெசும விண்ணப்பிப்பவர்கள் மற்றும் முன்னர் விண்ணப்பித்தும் தெரிவு செய்யப்படாதவர்கள் என சகலரும் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு சமூகமளித்திருந்த நிலையில் புதியவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரம் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டதுடன் ஏற்கனவே விண்ணப்பித்தும் தெரிவு செய்யப்படாதவர்கள்  மனக் குறையினை சமர்பிக்கும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி தமது கிராம உத்தியோகத்தர் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.






No comments

note