புத்தளம் நகர சகல முன்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்ட கலை கலாச்சார நிகழ்வுகள்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இயங்குகின்ற 35 முன்பள்ளி பாடசாலை மாணவர்களையும் ஒன்றினைத்து நடாத்தப்பட்ட பிரமாண்டமான சிறுவர் தின நிகழ்வுகள் வியாழக்கிழமை (31) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் நகர சபையின் விரிவான ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நகர சபையின் செயலாளர் கீதானி ப்ரீதிகா, சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி, முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி தயானி சுமனலதா ஆகியோர் இணைந்து இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
மொத்தமாக 35 முன்பள்ளி பாடசாலைகள் இதில் பங்கேற்றன. ஒவ்வொரு முன்பள்ளிகளிலிருந்தும் தலா ஒவ்வொரு கலை கலாச்சார நிகழ்ச்சிகள் கோரப்பட்டு மாணவர்களுடைய கலை கலாச்சார நிகழ்வுகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தளம் நகர சபையினால் அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments