Breaking News

புத்தளம் தில்லையடியில் ஞாயிறு இலவச மருத்துவ முகாம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் தில்லையடி ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ள இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 2024 டிசம்பர் 01 ம் திகதி புத்தளம் தில்லையடி அரபா நகர் உம்ராபாத் அன்சாரி பாடசாலையில் காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 05 மணிவரை நடைபெற உள்ளது.     


அரசின் அங்கிகாரத்துடன் 20 வருட அனுபவம் கொண்ட டொக்டர்.எஸ்.எம் றிஸான் தலைமையில் நடைபெற உள்ள இவ் இலவச மருத்துவ முகாமில் ஹோமியோபதி, அக்குபஞ்சர், ஹிஜாமா மற்றும் இயற்கை மருத்துவம் என்பன பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note