Breaking News

மருதமுனை அல்மனாரில் கோலாகலமாக இடம்பெற்ற ஏ.எல். தின விழா

(அஸ்லம் எஸ்.மெளலானா)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் 45 ஆவது வருடாந்த ஜி.சி.ஈ. உயர்தர பிரிவு மாணவர்களின் விடுகை விழா திங்கட்கிழமை (11) கல்லூரி மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.


கல்லூரி அதிபர் ஐ.உபைதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளரும் கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளருமான என்.எம். நெளபீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


அத்துடன் மருதமுனை மஸ்ஜிந் நூர் பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம். முகர்ரப் கெளரவ அதிதியாகவும் திறைசேரியின் பிரதிப் பணிப்பாளரும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளருமான ரி.எம். றிஹான் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இவர்களுடன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.


இதன்போது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் திறமை காட்டிய மாணவர்கள் பலர் அதிதிகளினால் பதக்கம் அணிவித்தும் சான்றிதழ் வழங்கியும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.


இவ்விழாவில் கவிதை, பாடல், நடனம், நாடகம் உட்பட கலை, கலாசார நிகழ்ச்சிகள் பலவும் மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டன.


விழா நினைவாக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முதற் பிரதி கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களை கௌரவித்து விசேட நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் அதிதிகள் தமதுரைகளின் போது இம்முறை உயர்தர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரைகளையும் எடுத்துக் கூறினர்.

















No comments

note