"வித்தகர்" விருது பெற்றார் சாய்ந்தமருதூர் யூ. எல். ஆதம்பாவா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், ஓய்வுபெற்ற முகாமைத்துவசேவை உத்தியோகத்தரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான யூ.எல். ஆதம்பாவா "வித்தகர்" விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிறுவயது முதல் தற்போது வரை நாட்டார் பாடல்களைப் பாடியும் எழுதியும் வருகின்ற அதேவேளை, அவற்றை நூல்வடிலும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
அவ்வாறு தொகுத்து எழுதிய நூல்களான "கிராமத்து மண்வாசம்", "தென்கிழக்கின் பாரம்பரியம்" என்ற நாட்டார் பாடல்கள் அடங்கிய நூல்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு, அந் நூல்களுக்காக "வித்தகர்" விருது கிடைக்கவுள்ளது.
பிரதேச, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவர், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த மர்ஹும்களான அஹமட் லெப்பை உதுமாலெப்பை, உதுமாலெப்பை றஹ்மத்துல்லா தம்பதிகளின் 3ஆவது மகன் என்பதுடன் தற்போது சாய்ந்தமருந்து பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சாய்ந்தமருது 09, ஜீ.எம்.எம்.எஸ் வீதியில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments