சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் நடாத்திய மீலாத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (MICH) தனது 71வது ஆண்டு மீலாதுன் நபி விழா மற்றும் ஹிப்ழ், பேச்சு போட்டி, மல்டிமீடியா வழங்கல் மற்றும் அரபு எழுத்தணி போட்டிகளை அண்மையில் நடாத்தி இருந்தது.
இதற்கான பரிசளிப்பு விழா 23 ம் திகதி சனிக்கிழமை கொழும்பு 06, வெள்ளவத்தை, ஷெய்கா பாத்திமா கட்டடத்தின் மர்லீன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
MICH இன் தலைவரரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான அல்-ஹாஜ் ஒமர் காமில் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் டாக்டர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் திருமதி டெல்கோஷ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
MICH இன் தலைவர் அல்-ஹாஜ் ஒமர் கமில், MICH இன் வெளியீடுகளை பிரதம அதிதியான டாக்டர் அலிரேசா டெல்கோஷிடம் வழங்கி வைத்தார்.
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் இணைச் செயலாளர்களான அஷ்ரோப் ஜமீல் மற்றும் ரிமாஸ் சலீம், இணைப் பொருளாளர் பரீன் கௌஸ், மகளிர் பணியகத் தலைவி திருமதி ஜஹாரா ஹனிபா மற்றும் அதன் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அஹதிய்யா பாடசாலைகளின் பிரதிநிதிகள், தஃவா குழு உறுப்பினர்கள், சமயக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தஃவா மற்றும் சமயக்குழு தவிசாளரும், அஹதியா மத்திய சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருமான சித்தீக் முஹம்மது ஷாஸ்லி நன்றியுரை நிகழ்த்தினார்.
No comments