Breaking News

அனைத்து சமயங்களுக்கும் அமைச்சர்களை ஏன் நியமிக்கவில்லை ?

சமத்துவம் என்பது வார்த்தைகளில் மாத்திரம் இருக்கக்கூடாது. அது நடைமுறையில் இருக்க வேண்டும். 


அரசியலுக்காக அரசியல் அறிவில்லாத அப்பாவி மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக எதுவும் பேசலாம், உணர்சியூட்டலாம், மூளைச்சலவை செய்யலாம், ஆனால் பேசுவது அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.  


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசானது இன, மத வேறுபாடுகள் இல்லாத சமத்துவ கொள்கைகளைக் கொண்ட சோஷலிச அரசு என்று நம்பப்படுகின்றது. 


ஜனாதிபதியின் வாகன கதவினை ஜனாதிபதியே திறந்து வருவதனால் மாத்திரம் சமத்துவத்தை முழுமைப்படுத்த முடியாது. 


பௌத்தத்துக்கும், சிங்களத்துக்கும் வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் இந்த நாட்டில் உள்ள அனைத்து இனங்களுக்கும், சமயங்களுக்கும் வழங்கப்படல் வேண்டும்.    


NPP அரசானது சமத்துவ கொள்கையை நிலைநாட்டுகிறோம் என்று கூறிவிட்டு பௌத்த சமையத்துக்காக மாத்திரம் அமைச்சர் பதவி வழங்க முடியுமென்றால், இந்த நாட்டின் ஏனைய சமயங்களான இஸ்லாம், இந்து, கத்தோலிக்க சமையங்களுக்கு தனித்தனியாக ஏன் அமைச்சர் பதவிகளை வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. 


இதனை யாராவது கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதிலிருந்து இவர்களும் பத்தில் ஒன்றுதான் என்பதனை மாத்திரம் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note