அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மஸ்ஜித் சம்மேளன கூட்டமும் நிர்வாகத் தெரிவும்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப் பட்ட மஸ்ஜித் சம்மேளன கூட்டம் புதன் கிழமை (20) இஷா தொழுகையின் பின் கடையாமோட்டை ஜாமிஉல் உமர் ஜும்ஆ மஸ்ஜிதில் அக்கரைப்பற்று கிளை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்லார் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.
தலைவரின் வரவேற்பு மற்றும் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில் கூட்டு முயற்சி, கூட்டாக செயல்படுவதின் நலவுகள், மற்றும் இஸ்லாம் அனுமதித்த முக்கிய வழிபாடுகள் என்பனவும் எடுத்துரைக்கப்பட்டன
தொடர்ந்து அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் அப்பாஸ் (ஹஸனி) மஸ்ஜித் சம்மேளனம் என்பது முக்கியம் வாய்ந்த ஒரு சபை. மற்றும் பல பலவகையான சவால்களை எதிர்கொள்ள முடியுமான ஒரு சபை. என்ற அடிப்படையில் உரையாற்றினார்
அதனைத் தொடர்ந்து மஸ்ஜித் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது.
தலைவராக
அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளீமி) ( அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அக்கரைப்பற்று கிளைத் தலைவர்)
பொதுச்செயலாளராக
எம்.எச் அமீர் (சேனைக்குடியிருப்பு ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்,)
பொருளாளராக
கே.எம் நிஷாந் (கடையாமோட்டை ஜாமிஉல் உமர் ஜும்ஆ மஸ்ஜித் செயலாளர் மற்றும் ஆசிரியர் )
உப தலைவர்களாக
அல்ஹாஜ் எஸ் ஐ.ஏ ரியாழ் (கொத்தாந்தீவு ஜும்ஆ மஸ்ஜித் தலைவர்)
அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். அப்பாஸ் (ஹஸனி) (அக்கரைப்பற்று கிளை ஜம்இய்யாவின் உப தலைவர்)
உப செயலாளராக
அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ முஜீபுர் ரஹ்மான் (மனாரி) (அக்கரைப்பற்று கிளை ஜம்இய்யாவின் செயலாளர்)
மேலும் செயற்குழு உறுப்பினர்களாக சகல ஜும்ஆ பள்ளிவாசல்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அஷ்ஷெய்க் ஏ.எல். பஸ்லுல் பாரிஸ் (நளிமி) பொறுப்புக்கள் அமானிதமானது என்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூத்த ஆலிம்கள் ஜம்இய்யாவிற்கு செய்த பங்களிப்பு எவ்வளவு உயர்வானது, அவர்கள் அன்று போட்ட வித்து தான் இன்று முளைத்திருக்கின்றது என்ற விடயங்களையும் ஞாபகமூட்டிதுடன் நன்றியுரையை அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
No comments