சமத்துவத்தை பேணுவதில் சறுக்கியுள்ளதை நியாயப்படுத்த முடியாது.
சமத்துவ கொள்கையை முதன்மையாகக் கொண்ட இடதுசாரி NPP யினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிகார சபைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட தவிசாளர்களில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த எவரும் நியமிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மேலோங்கி உள்ளது.
NPP ஆதரவாளர்கள் இதை சாதாரண தேர்தல் காலத்து அரசியலாக நினைத்து கிழக்கு மாகாண ஆளுநரின் தவறை நியாயப்படுத்தக்கூடாது.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக 37.12 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில், இது போன்ற அதிகாரம் உள்ள பதவிகளுக்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த எவரும் நியமிக்கப்படாதது ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கவேண்டி உள்ளது.
இன்றைய தேர்தல் காலத்தில் NPP யினர் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்த்துள்ள நிலையிலேயே இவ்வாறான புறக்கணிப்பு என்றால், ஏனைய காலங்களில் எவ்வாரான முக்கியத்துவம் வழங்கப்படும் என்று சிந்திக்க வேண்டும்.
இது போன்ற நியமனங்கள் வழங்கும்போது தனியாக ஆளுநர் மாத்திரம் ஒருதலை பட்சமாக தீர்மானிப்பதில்லை. ஆளுநறுக்கு பின்னணியில் ஆலோசனை வழங்குவதற்கு சக்தி ஒன்று செயல்பட்டிருக்கும். எதுவாக இருந்தாலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது.
இவ்வாறான புறக்கணிப்பு தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருப்பர். அந்த போர்க்குனம் முஸ்லிம்களிடம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அத்துடன் இதனை நியாயப்படுத்துவதற்கென்று முஸ்லிம் சமூகத்தில் சிலர் இல்லாமலில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments