கற்பிட்டி கிளை ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ ) கற்பிட்டி கிளை புத்தளம் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 10வது தடவையாக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (24) சீ.டி.ஜே யின் கற்பிட்டி கிளைத் தலைவர் எம்.எச்.எம் ஆஷாத் தலைமையில் இடம்பெற்றது.
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இரத்த தான முகாமில் இன மத வேறுபாடு இன்றி சகலரும் கலந்து கொண்டு தமது இரத்தங்களை வழங்கி வைத்ததுடன் இதில் கலந்து கொண்டவர்களுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் கற்பிட்டி கிளையினால் நினைவு பரிசு ஒன்றும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments