சாய்ந்தமருதில் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் வெற்றியை உறுதிப்படுத்தியது நேற்றைய மகளிர் எழுச்சி மாநாடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
திகாமடுல்ல மாவட்ட கல்முனைத் தொகுதியின் மரச்சின்னத்தில் 03ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற "மாபெரும் வெற்றி மகளிர் மாநாடு" கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பெண்கள் சாய்ந்தமருதில் கலந்து கொண்ட இந்நிகழ்வானது, பொதுத் தேர்தலில் போட்டியிடும் சிராஸ் மீராசாஹிபின் வெற்றியை நிச்சய வெற்றியாக உறுதிப்படுத்திய நிகழ்வாக அமைந்திருந்தது.
எங்கும் சனத்திரள் நிறைந்த நிகழ்வாகவும், அவரின் வெற்றியை நிச்சயம் உறுதிப்படுத்திய நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது மக்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள். இம்முறை சாய்ந்தமருதுக்கான பிரதிநிதித்துவம் உறுதியாகிவிட்டது என்றும் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதையும் இந்நிகழ்வில் காணக் கூடியதாகவும் இருந்தது.
No comments