புத்தளம் தள வைத்தியசாலையின் நோயாளர்களுக்கு தினந்தோறும் தேனீர் விநியோகம் செய்ய ஏற்பாடு.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இலவசமாக தேநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேனீர் விநியோக திட்டமானது 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இன மத நல்லிணக்கத்தை முன்னிட்டு அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளை இவ்வாறான ஏற்பாடை செய்துள்ளது.
ஒரு நாளைக்கு 06 கி.கி. சீனி, 01 கி.கி. தேயிலை என்ற அடிப்படையில் மாதம் 180 கி. சீனியும் 30 கி. தேயிலையும் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு இந்த மாதம் கடைசி வரை தேவையான சீனி தேயிலை என்பனவும், 16 தேநீர் தயாரிக்கும் கேத்தல்களும் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவர்களின் கரங்களால் உத்தியபூர்வமாக வைத்திய சாலையின் உயர் அதிகாரியின் கரங்களில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் சீரான சேவைகள் தொடர்பாக ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் அங்கத்தவர்களான
அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ),
அஷ்ஷேக் ஸல்மான் (இஹ்ஸானி),
அஷ்ஷேக் ரகீப் அஹ்மத் (ரஷாதீ) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு சமூக சேவையாளர் முஹம்மது முஜிபர், புத்தளம் வர்த்தக சங்கத்தின் தலைவர் வை.எம்.நிஸ்தார், சஹீரியன்ஸ் மிலேனியம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முஹம்மது பஹ்மி, சிட்டி போய்ஸ் போன்ற சமூக நலன் விரும்பிகள் மற்றும் ஜம்இய்யாவின் செயலாளர், உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு முழுமையான ஒத்துழைப்புதனை அல்ஹாஜ் நஸ்ரூன் வழங்கி வைத்திருந்தார்.
No comments